English │
සිංහල │
தமிழ்
ISO 9001:2015 Quality management certified institute
ISO 9001:2015 தர மேலாண்மை சான்றிதழ் நிறுவனம்
English │
සිංහල │
தமிழ்

எங்களைப் பற்றி

வாகன உமிழ்வு சோதனை திட்டத்தின் வரலாறு

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தால் ஏக்கல விமானப்படை தளத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவு .

வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டத்தால் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு (instructors) ஏக்கல விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவுகள்.

வாகன புகை உமிழ்வுக்கு எதிராகப் போராடுவதற்காக, சுமார் 50 விமானப்படை வீரர்கள் இங்கு பயிற்சி பெற்றனர். வாகன மாசுபாட்டின் குறிப்பிடத்தக்க சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் போன்றே மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் மற்றும் அத்தகைய புகை உமிழ்வை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட சட்ட கட்டமைப்புகள் குறித்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பயிற்சியானது வகுப்பறை அமர்வாகவும், செயன்முறை, நேரடி செயன்முறை அமர்வாகவும் நடத்தப்பட்டதுடன் இந்த அமர்வுகளின் மூலம் விமானப்படைக்குரிய வாகனங்களிலிருந்து வரும் பாதகமான புகை உமிழ்வைக் கண்காணித்து சரிசெய்யவதற்காக உள்ளக பணியாட்டொகுதியினரைத் தயார்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.