English │
සිංහල │
தமிழ்
ISO 9001:2015 Quality management certified institute
ISO 9001:2015 தர மேலாண்மை சான்றிதழ் நிறுவனம்
English │
සිංහල │
தமிழ்

எங்களைப் பற்றி

வாகன உமிழ்வு சோதனை திட்டத்தின் வரலாறு

தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை டியூனப் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இம்முறை நுவரேலியாவில்.

“நீல வானத்திற்காக தூய்மையான காற்று” சர்வதேச தினத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சித்திட்டம் நுவரேலியாவில் வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதிய கருத்திட்ட அலுவலகத்தின் வழிகாட்டலில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு “நீல வானத்திற்காக தூய்மையான காற்று” தொடர்பான சர்வதேச தினத்துடன் இணைந்து, வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நுவரேலியாவிலும், செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில், பதுளையிலும் இலவசமாக வாகன டியூனப் செய்யும் முகாம்களை ஏற்பாடு செய்தது. தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பரிசோதித்து அந்த நேரத்திலேயே டியூனப் செய்யக்கூடிய வாகனங்களை டியுனப் செய்தல் மற்றும் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதையும் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்தப் பணிகளுக்கு லாஃப்ஸ் இகோ ஸ்ரீநிறுவனம், டிரைவ் கிரீன் நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதுடன், மேலும் கிட்டத்தட்ட 700க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு சேவைகள் வழங்கப்பட்டன.