வாகன புகையின் சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த தொடர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கி நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சியில் வாகனப் புகையைக் கட்டுப்படுத்துவதற்கான மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் வனச் சுற்றுச்சூழல் சட்டத்தின் சட்ட விதிகளும் அடங்கும். இந்த நிகழ்ச்சித்திட்டம் ஒரு வகுப்பறை அமர்வு மற்றும் ஒரு செயன்முறை அமர்வு என்ற வகையில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது.