வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் முதற்தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட டியுனப் தன்சல மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு. நிஷாந்த அநுருத்த வீரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குரிய தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் டேவிட் பீரிஸ் மோட்டர்ஸ் தனியார் கம்பனியினால் வழங்கப்பட்டது. தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளிவிடும் வாகனங்களை அடையாளம் கண்டு வாகனத்தை முறையாக டியூனப் செய்து இலவசமாக பழுதுபார்த்தல், வாகனத்தை முறையாக பராமரிப்பதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் புகை உமிழ்வு செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் ஆகியன இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.